Breaking News

கோதாபயவுடன் பேச்சு நடத்தத் தயார் இல்லை என்கிறார் சம்பந்தன்!

Sambandanகாணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தாம் பேசத் தயாரில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சி கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய அதன் தலைவர் சம்பந்தன், வட மாகாணத்திற்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கோத்தபாய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் அவர் அரசாங்கம் இல்லையென்றும் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டம் தற்போது ஐநா வரை சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறானதொரு நிலையில், 2 கிலோ மீற்றர் வீதிக்காக தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாதென்று கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு உதவிய நாடுகள், தற்போது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமென்று சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சாp தங்களுக்கு தீர்வு ஒன்றே தேவை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை வழங்க வேண்டிய கடப்பாடு குறித்த நாடுகளுக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

No comments