ஜநாவினில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பு! டயலொக் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யப் போகிறதா கிரிக்கெட் சபை?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மலேசியா வாக்களித்திருந்தமை, சிறிலங்கா கிரிக்கட்டின் வருமானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கட் அணிக்கான அனுசரணையாளர்களின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அடுத்த மாதம் முதல் டயலொக்இ எக்சியாட்டா மற்றும் இலங்கை தேயிலை சபை என்பன அனுசரணை வழங்கவுள்ளன. இதற்காக 1.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் டயலொக் எக்சியாட்டா நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமாகும்.
ஏற்கனவே மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் மலேசியா வாக்களித்திருந்த நிலையில், அந்த நாட்டின் நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா கிரிக்கட் உடன்படிக்கை ஏற்படுத்தக்கூடாது என்று சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த இந்த உடன்படிக்கை ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments