Breaking News

இலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது: ஜோன் செனவிரட்ன

interview p8 picஇலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதனை தடுப்பது தொடர்பில் சட்டங்கள் இயற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட ரீதியில் மாடுகள் கொலை செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ளவதில்லை.கொடூரமான முறையில் மாடுகள் கொலை செய்யப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலர் மிகவும் மோசமான முறையில் மாடுகளை லொறிகளில் ஏற்றிச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்கின்றனர். இதனை நான் மட்டுமன்றி வேறும் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. மாடுகளை கொலை செய்வதனை தடை செய்தால் மாட்டிறைச்சியை சாப்பிடுவோருக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்.

இதேவேளை, கட்டாய மதமாற்றங்களை விடவும் பரிசுப் பொருட்களுக்காக மத மாறும் செயற்பாடுகளே அதிகரித்துள்ளன. இவ்வாறு மதம் மாறும் செயற்பாடுகளில் பௌத்தர்கள் ஈடுபடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments