அசாத் சாலி வைத்தியசாலையில்…
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அசாத் சாலி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இன்று மாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாத் சாலிக்கு ஏற்கணவே நிரிழிவு நோய் இருக்கின்ற நிலையில் அவர் கடந்த இரண்டு தினங்களாக உணவு எதனையும் உட்கொள்ளாத நிலையிலேயே உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட உணவை அவர் உண்ண மறுத்ள்ளதுடன் உண்ணாவிரதம் இருந்தமையும் சுட்டிக்கட்டத்தக்கது.
No comments