Breaking News

அசாத் சாலியை விடுதலை செய் : கொட்டும் மலையிலும் ஆர்ப்பாட்டம் (Photos)

5-3-2013 5-24-39 PM

கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி இன்று ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து கொழும்பு 07 தெவட்டகஹ பள்ளிவாசல் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு முன்பாக பேரணியாக சென்றனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டதத்தில் கலந்துகொண்ட விக்கிரமபாகு கருணாரத்தின, மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் மக்கள் முன்னிலையில் உரையாற்றினர். இதன் போது, முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் உரிமைகளுக்காக போராடி வரும் அஸாத் சாலியை கைது செய்தமைக்காக அரசாங்கத்தை கண்டித்ததோடு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்தோடு அஸாத் சாலியின் கைது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் பதில் கூற வேண்டும் எனவும் அவருக்கு ஏதும் நடைபெறுமானால் அரசாங்கமும் ஜனாதிபதியுமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

.

நன்றி : விடிவெள்ளி

No comments