Breaking News

அசாத் சாலியை வைத்தியசாலையில் பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

Azath Sally's Daugter குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்றிரவு மனைவி, மகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தரப்பு அசாத் சாலியை பார்க்க அனுமதிக்காத நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர். ஜயலத் ஜெயவர்த்தன மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அத்துடன் அசாத் சாலி அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலையின் 55ம் இலக்க வார்ட் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம்  அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அசாத் சாலியின் சட்டத்தரணியிடம், நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என சட்டமா  அதிபர் தெரிவித்திருப்பதாக  தகவல் தெரிவிக்கின்றது.

அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற  சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு  பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடச் செய்யுங்கள் என  அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அரசு தலைமையிடம் பெரிதும் வலியுறுத்தி உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி:   அசாத் சாலி வைத்தியசாலையில்

No comments