Breaking News

நாட்டின் பொருளாதாரத்தை குற்றவாளிகளே கட்டுப்பத்துகின்றனர் – சம்பிக்க ரணவக்க

Champika_CI நாட்டின் பொருளாதாரத்தை குற்றவாளிகளே கட்டுப்படுத்தி வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது எனத் தெரியாத போதிய புத்திசாதூரியமற்ற குற்றவாளிகளிடம் நாட்டின் பொருளாதாரம் ஒப்படைக்கப்பபட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கனவான் குற்றவாளிடமிருந்து நாட்டின் பொருளதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வானது கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகாரிக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் மின்சார தேவையை சரியான முறையில் அறிந்து கொண்டு உரிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments