தந்தையைக் காப்பாற்ற உதவுங்கள் : அமீனா சாலி
முனால் கொழும்பு மாநகர பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயளாலருமான அசாத் சாலியின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்குறிய முழுப் பொறுப்பையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்க வேண்டும் என அசாத் சாலியின் மகள் அமீனா சாலி கூறியுள்ளார்.நேற்றைய தினம் ராஜகிரிய தேசிய தோட்டத் தொழிளாலர் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். தனது தந்தையை பயங்கரவாதி என்று கூறுவது மிகுந்த வருத்தைத் தருவதாக கூறிய அவர் தந்தை குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்படும் போது ஒரு குவலை தண்ணீர் மாத்திரமே அருந்தியிருந்தகவும் கூறினார்.
மேலும், அவர் இதுவரை எவ்வித ஆகாரமும் உற்கொள்ளவில்லை என்றும், அவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அசாத் சாலி எந்த சந்தர்ப்பத்திலும் எந்த அநியாயமும் செய்யதவர், அவரை கப்பாற்றுவதற்கு அனைத்து எதிர்க் கட்சிகளையும், நீதி நேர்மையை மதிக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் தன்னௌடன் ஒத்துழைக்குமாறு அமீனா மேலும் வேண்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிக் கட்சியின் எதிர்ப்பு அமைப்பினால் இந்த ஊடகவியளாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினர் பீ.சுமந்திரன், மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் ஹேமகுமார நானயக்கார, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிரிதுங்க ஜயசூரிய, புதிய சிஹல உருமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர மற்றும் ருஹுனு தேசி கட்சி தலைவர் அருன சொய்சா ஆகியோரும் கலந்துகொன்டனர்.
No comments