Breaking News

அசாத் சாலி மருந்து சாப்பிட மறுக்கிறார் – தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர்

378520_305604052887303_1987113760_n நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னால் பிரதி மேயர் அசாத் சாலி வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் உணவினை உட்கொள்ள தொடர்ந்தும் மறுத்துவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் குற்றப்புலனய்வுப்பொலிசாரினால் கைது செய்யப்பட முன்னாள் கொழும்பு மா நகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி சுமார் 30 மணித்தியாலங்கள் வரையில் உணவு,நீர் உட்கொள்ளாது இருந்துவந்ததை தொடர்ந்து உடல் நிலையில் ஏற்பட்ட நலக்குறைவு காரணமாக நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே குறித்த வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் அசாத் சாலி மருந்து சாப்பிட மறுத்துவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments