Breaking News

புத்தசாசன அமைச்சை கோத்தாபயவுக்கு வழங்கவும்: பொதுபல சேனா சிபாரிசு

Bodu-Bala-Sena புத்தசாசன அமைச்சு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென பொதுபல சேனா இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

புத்தசாசன அமைச்சு தற்போது மிகவும் குறைந்த பாதுகாப்பிலேயே இயங்கிவருகிறது. எனவே, அதிக உற்சாகத்துடன் இந்த அமைச்சு செயற்படுதற்கு தற்போதைய பாதுகாப்புச் செயலாளரே மிகவும் பொருத்தமானர் என்று ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சிங்களவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு அனைத்து அமைச்சர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்குசெய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

(NM)

No comments