13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய ஒத்துழைக்க மாட்டோம்! ஹக்கீம்
13ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய எவ்விகையிலும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மாவடிச்சேனையில் நேற்று (25) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதிகரிப்பதற்கு மாத்திரமே ஆதரவு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை தொகுதி அமைப்பாளரும், நீரியல்வளத்துறை அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, வடக்கு மாகாணத்திற்கு 13ஆவது திருத்திற்கமைய பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments