வேளை நிறுத்தக் காரர்களை தேடுகிறதா அரசாங்கம்..?
அலுவலகங்களுக்கு நேற்று வருகை தராத உத்தியோகத்தர்களின் விபரங்களை பிரதமரின் செயலகம் சகல அரச திணைக்களங்களிடமும், கூட்டுத்தாபனங்களிடமும் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.
பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர ஒப்பமிட்டு சகல செயலாளர்கள், பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் போன்றோருக்கு அவசர தொலைநகர் மூலம் அனுப்பிவைத்துள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
21ஆம் திகதி காலை 9 மணிக்குள் கடமைக்கு வராதவர்களின் விபரமும் பின்னர் 10 மணி வரை வருகை தராதவர்களின் விபரமும் அவசரமாக பிரதமர் செயலக தொலைநகருக்கு அனுப்பிவைக்குமாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்குபற்றிய அரச உத்தியோகத்தர்களின் விபரங்களை திரட்டும் பணியாகவே இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
No comments