பொது பல சேனா தலைமயகம் முன்பாக பதற்றம்…
கொழும்பு, தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலக வாசலில் இன்று (22) காலை பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகள் சிலர் குறித்த அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தபோதே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், பொதுபல சேனா அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமும் சில தரப்பினர் பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக மெழுகுவர்த்திகளை ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், உடனடியாக பொலிஸார் அழைக்கப்பட்டு அந்த இடத்திலிருந்து குறித்த தரப்பினர் அப்புறப்படுத்தப்பட்டமை நினைவூட்டத்தக்கது.
”பொதுபல சேனாவைக் கேள்வி கேட்கும் பௌத்தர்கள்” என்ற பதாதையுடன் இந்த அமைப்பினர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற இந்த அமைப்பு, நாம் அரசியலில் நுழைய மாட்டோம் எனக் கூறியிருந்ததுடன் தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
No comments