அடுத்த பிரபாகரகனைப் போல மன்னார் ஆயர் செயல்படுகிறார்! பொதுபல சேனா
அடுத்த பிரபாகரனனைப் போல மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயல்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இதேவேளை, தகாத உறவினால் இந்தியாவிற்குப் பிறந்த 13ஆவது திருத்தச் சட்டக் குழந்தையை இலங்கை பாலூட்டி வளர்க்க வேண்டிய தேவையில்லை எனவும், அரசாங்கம் உடனடியாக 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதுடன் வட மாகாண சபைக்கான தேர்தலையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
”நாட்டில் மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலைதூக்குகின்றன. அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயல்படுகிறார். ஆகவே, சிங்கள மக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வீதியிலிறங்கி போராட வேண்டும். எட்டு மாகாணங்களிலும் உள்ள முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தத்தமது பதவிகளை துறந்துவிட்டு உண்மையான தேசப்பற்றை மாகாண சபை முறைக்கு எதிராக வெளிப்படுத்த வேண்டும். மத விடயங்களுககு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாக பொதுபல சேனா மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. ஆனால்அது அவ்வாறில்லை. இலங்கையில் பௌத்த தர்மத்தைப் பாதுகாத்து ஏனைய அனைத்து விடயங்களிலும் தலையீடுகளை மேற்கொள்வதே எமது நோக்கமாகும். தற்போத 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். மக்கள் கருத்துக் கணிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இதெல்லாம் அநாவசியமான பேச்சு, அது மட்டுமின்றி வட மாகாண சபைத் தேர்தலையும், நடத்தக்கூடாது. ஏனெனில், வட மாகாண சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். இதனைத் தோல்வியடையச் செய்ய எதிரியுடனேயே கூட்டணி அமைத்துப் போராடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : 13ஆவது அரசமைப்பிற்கு எதிராக பொதுபலசேனாவும் களமிறக்கப்படுகிறது!
No comments