முஸ்லிம்களை தீவிரவாதத்துக்குள் சிக்கவைக்க சதியா?
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன. தீவிரவாதம் வளர்கின்றது. ஜிஹாத், அல்கைதா போன்ற அமைப்புக்கள் இருக்கின்றன என்று சில கடும்போக்கு பௌத்த அமைப்புக்களும் சில வெளிநாட்டுச் சக்திகளும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றன.
முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக்குழுக்கள் இயங்குவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தபோதும் இதுவரை அது நிரூபிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் சில சக்திகள் முஸ்லிம்களைத் தீவிரவாதத்தின் பக்கம் தள்ளுவதற்கு முயற்சிப்பதாகத் தெரிகிறது.
சமூகத்துக்கு நடக்கும் அநீதிகளுக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டுவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கு கடந்த வாரம் வெளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் அவர்களின் பேட்டியில் முஸ்லிம் இளைஞர்களை வன்முறைக்குத் துண்டும் உள்ளூர், சர்வதேச சக்திகள் பற்றி எச்சரித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கெதிராக அண்மைக்காலமாக போர்க் கொடி தூக்கியுள்ள பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய, சிங்கள ராவய, ராவண இயக்கம் போன்றன, முஸ்லிம்கள் மத்தியில் ஜிஹாத் செயற்பாடுகள் இருப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இலங்கைவாழ் முஸ்லிம்கள் அன்று முதல் இன்றுவரை ஜனநாயக வழிமுறைகளை நம்பிச் செயற்பட்டு வருகின்றனர். முஸ்லிம்களுக்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்ட காலத்தில்கூட முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக்குழுக்கள் உருவாகவில்லை. ஆனால், சில தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாப்பதற் காக அரச அனுசரணையுடன் ஊர்காவற் படைகள் கிழக்கில் இயங்கின.
தற்போதுள்ள சூழலில் முஸ்லிம்கள்மீது தீவிரவாத முத்திரையைப் பொறிக்க முற்படும் செயற்பாடுகள் குறித்து முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் கவனமாகச் செயற்படுவது அவசியமாகும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு தமது அபிலாஷைகளை ஆயுதப் போராட்டங்களாலோ அல்லது தீவிரவாத வழிமுறைகளாலோ வென்றெக்க முடியாது இவ்வாறு யாராவது செய்ய முற்படுவார்களாயின் அது தற்கொலை முயற்சிக்கு சமமாகவே அமையும். உலகின் பலமான தீவிரவாத இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகளது செயற்பாடுகளால் இன்று தமிழ்ச் சமுதாயம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
மூன்று தசாப்த யுத்த முடிவுக்குப் பின் இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியைச் சகிக்க விரும்பாத சில வெளிநாட்டுச் சக்திகள் முஸ்லிம் சமூக இளைஞர்களை சிக்கவைக்கும் முயற்சிகளில் ஈபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது இந்தப் பின்னணியில் முஸ்லிம் இளைஞர்கள் மிக நிதானத்துடன் செயற்படுவது அவசியமாகும் ஸுஹைர் குறிப்பிட்டிருப்பது போன்று முஸ்லிம் இளைஞர்கள் தீவிர செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவர்கள் இலக்கு வைக்கப்பட லாம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படலாம்.
இந்தியாவிலும் மற்றும் அரபு நாடுகளிலும் நடப்பது போன்று வெளிநாட்டு சக்திகள் இளைஞர்கள் மத்தியில் ஊடுறுவி டொலர்களை வழங்கி தம் இலக்குகளை அடைய தவறான வழிக்கு இட்டுச்செல்லாம். இதுகுறித்து முஸ்லிம் இளைஞர்களை அறிவூட்டுவதற்கு உலமாக்கள் வெள்ளிக்கிழமை நடத்தும் ஜும்ஆ பிரசங்கங்களை பயன்படுத்துவது நல்லது.
நாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் அமுலிலிருக்கின்றது. இச்சட்டத்தின் கீழ் எவ்வித விசார ணையுமின்றி நீண்ட காலம் தடுத்துவைக்க ஏற்பாடுகள் உண்டு. அயல் நாடான இந்தியாவில் பங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 51,200 முஸ்லிம்கள் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் அனேகர் அப்பாவிகள். சிறுசிறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களை துரிதமாக விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. (இந்திய முஸ்லிம்களின் நிலை இலங்கை முஸ்லிம்களுக்கு பாடமாக அமையவேண்டும். முஸ்லிம்கள் தம் பிரச்சினைகளை ஜனநாயக வழி முறைகளுக்கு அப்பால் சென்று தீர்த்துக் கொள்வது குறித்து நினைத்தும் பார்க்கக் கூடாது.
நாட்டிலுள்ள சூழலில் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். எல்லா விடயங்களிலும் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதற்காக ஆத்திரம், அவசரப்பட்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள தவறான வழிகளை நாடினால் முழுச் சமூகமும் பாதிக்கப்படலாம்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளது ஒற்றுமையின்மை, பிரச்சினைகளை உரிய இடத்திற்கு உரிய முறையில் சமர்ப்பிக்காமை காரணமாக இளைஞர்கள் மத்தியில் அவர்கள் பற்றி அதிருப்தியும் வெறுப்பும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இவ்வாறான வெறுப்புக்களே இளைஞர்களை விபரீதமான வழிக ளுக்கு நாடத் தூண்டுகின்றது. சமூகத்தின் இளைஞர்களது அபிலாஷைகளை புரிந்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் செயற்படுவது அவசியமாகும்.
தொடர்புடைய செய்திகள் : முஸ்லிம் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் சக்திகள்
நன்றி : நவமணி
No comments