பிக்குவின் தீக்குளிப்பு தொடர்பில் ஊடகங்கள் மீது விசாரணை : வீடியோ இனைப்பு (Video)
பௌத்த பிக்கு தீக்குளிப்பு சம்பவத்துடன் ஊடகங்களுக்கான தொடர்பு குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி ஸ்ரீ தலாதா மாளிகைக்கு எதிரில் கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று போவத்தே இந்திரரட்ன தேரர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்ளும் திட்டம் குறித்து பௌத்த பிக்கு உள்ளுர் ஊடகமொன்றுக்கு முன்கூட்டியே கருத்து வெளியிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை தெரியப்படுத்தியிருப்பின் பிக்குவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் திட்டம் குறித்து முன்கூட்டியே அறிவித்த சில ஊடகவியலாளர்களும் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்கூட்டியே தெரிந்திருந்தும் காக்காத ஊடகங்கள்..
Post Comment
No comments