மாமிசக் கலப்பற்ற உணவுக்கும் ஹலால் போன்று சான்றிதழ்
மாமிசக் கலப்பற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைச் சான்றிதழை அறிமுகப்படுத்த இலங்கை கட்டளை பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த கட்டளை சட்ட மூலம் மாமிசக் கலப்பற்ற உணவு வகைகளை உண்போரை ஊக்குவிப்பது இறைச்சி உண்பதால் ஏற்படும் பாதகங்களிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பதற்கு வழிகாட்டுவதே நோக்கம் என அது தொடர்பான மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார்.
உரிய கட்டளைப்படி தயாரிக்கப்பட்ட உணவுற்பத்தி பண்டகசாலைப்படுத்த விநியோகித்தல், விற்பனை செய்தல் தொடர்பான நிபந்தனைகள் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கேற்ப இலங்கை கட்டளைப் பணியகம் தயாரித்துள்ள இந்த சட்ட மூலம் பற்றி ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை மக்களுக்கு தம் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என கட்டளைப் பணியக பணிப்பாளர் நாயகம் எல்.எம்.செனெவீர தெரிவித்தார்.
இதனை அறிமுகப்படுத்துவதில் சமய நோக்கங்கள் எதுவுமில்லை என்றும் அமைச்சர் சம்பிக தெரிவித்துள்ளார்.
No comments