Breaking News

இலங்கைக்கு எதிராக அணி திரளும் மேற்குலக ஊடகங்கள்!

Media Picture இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்குமாறு மேற்குலக ஊடகங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளின் முக்கிய ஊடகங்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியும், அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் குறிப்பிட்டும், இந்த ஊடகங்கள் செய்திகள், கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டை கனேடியப் பிரதமர் மட்டும் இதுவரை புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தமது நாடு, மாநாட்டில் பங்கேற்கும் என்று கூறியுள்ளார்.
நியூஸிலாந்தும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. அதேவேளை பிரிட்டன் இன்னமும் தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி பொது நலவாய மாநாட்டைப் புறக்கணிக்கும் பரப்புரைகளை இந்த நான்கு நாடுகளினதும் முக்கிய ஊடகங்கள் முன்னெடுத்து வருகின்றன.
பிரிட்டனின் ரெலிகிராப், இன்டிபென்டென்ட், கார்டியன் போன்ற நாளேடுகள் புறக்கணிப்புக்கு ஆதரவாக ஆசிரியர் தலையங்கங்களை வெளியிட்டுள்ளதுடன், அதுசார்ந்த கட்டுரைகளை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டிவருகின்றன.
அவுஸ்திரேலியாவின் முன்னணி ஊடகங்களும் புறக்கணிப்பை வலியுறுத்தி வருகின்றன. கனடாவின் குளோபல் போஸ்ட் உள்ளிட்ட முக்கிய ஊடகங்களும் கனேடிய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செய்திகள், கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன.

(PT)

No comments