மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் வழமை போன்று இயங்கும்
கடந்த சில தினங்களாக கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் மூடப்பட்டிருந்த இறைச்சிக் கடைகள் யாவும் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படுமென இறைச்சிக் கடை உரிமையாளரொருவர் தெரிவித்தார்.
வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்பட்டமை, தேரரின் தீக்குளிப்பு போன்ற நிகழ்வுகள் காரணமாக மாடுகள் எடுத்து வருவதில் ஏற்பட்டிருந்த தடை காரணமாக இறைச்சிக் கடைகளை மூட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சில கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய கடைகள் வெள்ளி முதல் வழமைபோல் திறக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பசு மாடுகள் அறுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தேரரொருவர் தீக்குளித்த சம்பவத்தையடுத்து இறைச்சிக் கடைகளை மூடி விடுமாறு பொலிஸார் எந்தவித அறிவித்தலையும் விடுக்கவில்லையென்றும் மாடுகள் கொழும்புக்கு எடுத்து வரப்படாமையே இதற்கான காரணமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post Comment
No comments