முஸ்லிம் கட்சிகள், அமைப்புகளுடன் பேசுவதற்கு தயார்: சரத் பொன்சேகா
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அமைப்புகளுடன் பேசுவதற்குத் தயாராகவுள்ளேன் என ஜனநாயக் கட்சித் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நவமணிக்கு வழங்கிய விஷேட செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தொகையான முஸ்லிம்கள் எனக்காக வாக்களித்தார்கள். இந்த நிலையில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவர்களுக்காகக் குரலெழுப்ப வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கிறது.
முஸ்லிம்களுடனான எனது உறவுவைச் சீர்குலைப்பதற்கு சதி முயற்சி நடக்கிறது. என்னை இனவாதியாகவும் முஸ்லிம் விரோதியாகவும் சித்தரிக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகாரங்களில் சதி வலைகளில் வீழ்ந்து விடக்கூடாது. உண்மை நிலையை அறிந்து அதன்படி செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நன்றி : நவமணி
No comments