இலங்கையில் அல்கைதா இல்லை : அடித்துக் கூறுகிறது இராணுவம்
ஈரானிய புலனாய்வுத்தகவல்களை ஆதாரம் காட்டி இலங்கையில் அல்கைதா செயற்படுவதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அச்செய்தி எவ்வித அடிப்படையும் அற்றது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையினுடைய பாதுகாப்பு உள்ளிட்ட தற்போதைய அனைத்து நிலைமையும் எமக்கு நன்றாக தெரியும். இந்நிலையில் இலங்கையில் அல்கைதா தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்களின் எவ்விதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இராணுவம் என்ற அடிப்படையில் அதனை நாம் தெளிவுபடுத்தலாம்.
இலங்கையில் இனமத பேதங்களுக்கு அப்பால் நாம் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறான அடிப்படை அற்ற செய்திகளையும் தகவல்களையும் ஒரு சூழ்ச்சியாகவே நோக்கவேண்டியுள்ளது.
இலங்கையில் அல்கைதா செயற்படவில்லை என்பதை நாம் தெளிவாக சொல்லலாம். அல்கைதா உள்ளிட்ட குழுக்கள் இலங்கையில் இயங்குவதாக வெளியாகும் போலி தகவல்களை நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என தெரிவித்தார்.
நன்றி : விடிவெள்ளி
No comments