Breaking News

எதிர்வரும் போயா தினத்தில் இலங்கை முஸ்லீம்கள் சிலரை கோழைகளாக்குவதற்கான முயற்சி !!!!!

குர்பான் கொடுப்பது என்பது எமது அரசியல் யாப்பில் அங்கிகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் மத உரிமையின் ஒரு பகுதியாகும் அதனை யாருக்கும் இடஞ்சலில்லாமல் நாம் நிறைவேற்றலாம்.இதற்கு இடஞ்சலை ஏற்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை.
இந்த உரிமையை நீக்குவதற்ற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவு பெற்று அதனை மக்களாணையைப்பெற மக்கள் தீர்ப்புக்கு (Referendum)விடப்பட்டு அது பெருன்பான்மையினரால் அங்கிகரிக்கப்பட வேண்டும்.சாதாரணமாக கண்டி மாநகர ஆணையாளரினால் இந்த உரிமையை தடை செய்ய எடுத்த முடிவு கண்டி மா நகர சபைக்கு சொந்தமான இறைச்சிக்கடைகளை மாத்திரம் கட்டுப்படுத்தும்.அதற்கு வெளியே எவரையும் அவரால் கட்டுப்படுத்த முடியாது.
"இறைச்சி மாத்திரமா?முஸ்லிம்களின் சாப்பாடு மரக்கறியை சாப்பிடுங்கள்", "ஹபாயா மாத்திரமா எமது உடை முஸ்லிம் பெண்மணிகள் சாரிக்கு மாறுங்கள்", " அடித்துக்கொண்டு வருகிறார்களா நோன்பு பிடியுங்கள் குனூத் ஓதுங்கள்", "திகனையில் அடித்தார்களா? கால் கழுவி பள்ளிக்குள் பன ஓத வையுங்கள்","கலவரம் செய்து கோடிக்கணக்கில் சொத்தை நாசம் செய்தவர்களை பள்ளியும் பன்சலையும் சமாதானம் பேசி கயவர்களை மன்னித்து விடுங்கள் வழக்கு தேவையில்ல"
என தீர்மானங்களை எடுத்து, மனித சமூகத்திற்கே வழிகாட்டிய முஸ்லிம்களை தங்களது பதவி எனும் சுயநலனுக்காக கோழைகளாகவும் பயந்தாங்கொள்ளிகளாகவும் மாற்றும் சமூகத்தின் சுமூக வாழ்வு பிரியர்களின் இன்றைய பத்திரிகை செய்திகள் இன்னுமொரு முட்டாள் தனத்தை பறைசாற்றி நிற்கிறது.
இன்றைய தமிழ் பத்திரிகையில் உழ்கியா கொடுப்பது தொடர்பான வழிகாட்டல்களில் "மாட்டை விட ஆடு அறுப்பது சிறந்தது எனத்தொடங்கி ......எதிர்வரும் நிகினி போயா தினம் (25/08/2018) குர்பான் செயற்பாடு எதுவும் செய்யக்கூடாதாம்.
உண்மையில் அன்றைய தினம் உழ்ஹியாவிற்குரிய தினமல்ல ,இருந்தாலும் சில வேளைகளில் பிறை விசயத்தில் சில தில்லு முள்ளுகளைச்செய்து பெருநாளைக்கூட குறித்த நாளில் கொண்டாடாவிடாமல் சதி செய்யும் இக்கூட்டத்தின் வலையில் விழும் அப்பாவி முஸ்லிம்களுக்காக இந்த சட்ட விளக்கம்.
போயா தினத்தில் குர்பான் கூடாது எனும் இவர்களின் வாதம்,எவ்வாறு சட்டவிரோதமாகும் என அதனுடன் தொடர்பான சட்டத்துடன் உண்மையை விளங்கிக்கொள்வோம்.
இலங்கையின் 1971 ம் ஆண்டின் 29 ம் இலக்க புனித நாட்கள்( Holiday)அல்லது போயா நாட்கள் சட்டத்தில் சில நாட்களை புனித நாட்களாக குறிப்பிட்டு அதில் செய்யக்கூடாத வேலைகளை வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இச்சட்டத்தின் பிரிவு 13 (a),(b),(c) (d) படி குறித்த போயா தினத்தில்
இரவு விடுதி (night club),நடன அரங்கு (dancehall),பொதுவெளியரங்கு ,மதுசாலைகள்,கள்ளுத்தவரனைகள்,குதிரை ஒட்டுக்கட்டுமிடங்கள்,சூதாட்டக்கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகள் என்பன வியாபாரத்திற்காக திறந்திருக்கக்கூடாது.
மேலும் பிரிவு 14 படி "குறிப்பிட்ட தினத்தில விற்கும் நோக்கத்திற்காக எதாவது மிருகத்தை அறுத்தல் அல்லது அறுத்த மாமிசத்தை விற்றல்அல்லது விற்பதற்கு வழங்குதல் குற்றமாகும்".
இந்த சட்டத்தில் இறைச்சியை விற்கும் நோக்குடன் அறுத்தல் மாமிசத்தை விற்றல் அல்லது விற்பனைக்காக வழங்குதல் குற்றமாக இருக்கும் போது இனாமாக வழங்கும் அல்லாஹ்வின் கட்டளையை (உழ்ஹியா)இல்லாத சட்டத்தை சொல்லுவதனூடாக எதனை சாதிக்கப்போகிறது இந்த அட்ஜஸ்ட்மன் பார்டி.
சட்டத்திற்கு முரணாக சமூகத்திற்கு வழிகாட்டுவது சட்டவிரோத செயலல்லவா? எப்போது திருந்தும் இச்சமூகம்.
25/08/2018 அன்று உழ்ஹியாவுக்குறிய நாளில்லை என்பது சாதாரண முஸ்லிமிற்கே தெரிகின்ற போது முற்றுமறிந்த ஆலிம்கள் ?தவறுக்கு மேல் தவறை செய்கிறார்கள். இவர்களுக்கு உலக அறிவுமில்லை மார்க்க அறிவுமில்லை சட்ட அறிவுமில்லை. உண்மையில் தூங்குபவர்களுக்கு மாத்திரம் இவ்விளக்கம் தூங்குவதுபோல் நடிப்பவர்களுக்கு அல்ல.
குறிப்பு :- குறித்த செய்திகளை பிரசுரிக்கும் பத்திரிகையாளர்களே நீங்கள் போடும் செய்திகளை அப்படியே முஸ்லிம்கள ஏற்பார்கள் என்னும் உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.எமது இளைஞர்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.காரணம் நவீன டிஜிடல் உலகின் புரட்சி ,பழசுகள் (வயோதிபர்கள்)பத்திரிகையில் உங்கள் செய்திகளை புதியவையாக பார்க்கும் போது எமது இளைஞர்களுக்கு அச்செய்திகள் அனைத்தும் பழசு என்பதை கருத்திற்கொண்டு செய்தி எங்கிருந்து வருகிறது என்று பார்க்காமல் என்ன செய்தி வருகிறது எனப்பாருங்கள். இஸ்லாம் சம்பந்தமான செய்திகள் வரும் போது சற்று சிந்தித்து பிரசுரியுங்கள்.
சட்டத்தரணி சறூக் -கொழும்பு.
0771884448

No comments