Breaking News

வேஷம் களைகிறதா..? : தெஹிவலை ரோஹிங்க அகதிகள் விவகாரம்

கடந்த வாரம் தெஹிவலை கல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பனியகத்தை பொறுப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகள் மீது இனவாதிகள் அத்துமீறி செயற்பட்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே. இந்த நாடகத்தின் முக்கிய கதாநாயகனாகிய டான் பிரியசாத் உள்ளிட்ட ஐந்த் பேர் தலைமரைவாகியிருந்து பின்னர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கல்கிஸ்ஸை நீதிமன்றில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றின் ஆஜரான சட்டத்தரனி யார் என்று அறிந்தபோது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பின்னர் வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து சொன்ன அந்த சட்டத்தரனி கூறிய கருத்துக்கள் அதை விட அதிர்ச்சியை கொடுத்தது.
சட்டத்தரனி மேஜர் அஜித் பிரசன்ன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை வேட்பாளர். இலங்கையில் பரவலாக இனவாத பரவலாக பேசப்பட்ட கடந்த காலத்தில் நியாயமான முறையில் விடயங்களை அனுகியதோடு மட்டுமல்லாமல் இனவாதக் கருத்துக்களை பரப்புவோருக்கும், இணவாத செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் பொருத்தமான பதில்களை தந்து முகநூல் (Facebook) மூலம் வழங்கியவர். இது போன்ற இவரது நடவடிக்கைகளால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது.
இந்த சட்டத்தரனி மேஜர் அஜித் பிரசன்ன தான் கடந்த டான் பிரியசாத் உள்ளிட்ட இனவாதிகளின் வழக்கில் இனவாதிகள் சார்பில் வாத்திட்டவர். வழக்கு நிறைவடைந்ததன் பின்னர் வெளியில் இருந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அஜித் பிரசன்ன, இனவாதி டான் பிரியசத்தை “சகோதரர் டான் பிரியசாத் (டான் பிரியசாத் சஹோதரயா)” என்று கூறினார். இந்த சகோதர பாசம் இவருக்கு திடீரென்று எப்படி வந்தது என்று புரிய வில்லை. தொடர்ந்து பேசுகையில், இங்கு கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் அப்பாவி நிரபராதிகள், இவர்கள் அனியாயமாக இதில் சிக்கியுள்ளனர். இவர்கள் ஒரு இன்னொருவரின் சதி வலையில் சிக்கியுள்ளனர் என்று கூறிவிட்டு, ரோஹிங்கி அகதிகளுக்கெதிரான அத்துமீரல் ஒரு திட்டமிடப்பட்ட சதியென்றும் அதன் உண்மை நிலை இதுவல்ல எனவும், இதன் பின்னனி வேறு என்று கூரிய அவர். மிரிஹான முக்கமில் இருந்த ரோஹிங்கிய பெண் ஒரு பொலிஸ் அதிகாரியால் துஷ்பிரயோகம் செய்யபட்ட சம்பவமே இதன் பின்னணி என்றும் சம்பவத்தை திசை திருப்ப முட்படுவதாக தெரிகிறது.
மிரிஹான விவகாரத்தில் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரியும் அவரது தரப்புமே இந்த அத்துமீரலை திட்டமிட்டு வழிநடாத்தியதாக கூறும் அஜித் பிரசன்ன, இவ்வாறு பிரச்சினை உண்டாக்கி இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றினால் குறித்த பொலிஸ் அதிகாரி தப்பிக்க முடியுமாதலாலே இவ்வாறு அவர்கள் மக்களை தூண்டியுள்ளதாக கூறுகிறார்.
அப்படியென்றால் இவ்வளவு காலமும் நாட்டில் டான் பிரிய்சாத் உள்ளிட்ட தரப்பினர் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கும் இந்த சதியையா இவர் காரனம் காட்டப் போகிறார்? குறித்த ரோஹிங்கிய பெண்ணின் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மிரிஹான நீதிமன்றத்தி வழ்க்கொன்று இடம்பெற்று வருகிறது. அந்த வழக்கின் நிகழ்வை டன் பிரியசாத் வழக்குடன் சேர்க்க முற்படுவதன் நோக்கம் என்ன. தெஹிவலை சம்பவத்தின் பின்னட் டான் பிரியசாத் குழு Facebook இல் Live வீடியோ மூலம் தீவிரவாதிகளை விரட்டிவிட்டதாகவும், மிகவு சந்தோஷமாக உள்ளதாகவும் கொக்கரித்தான். இதெல்லா தூண்டல் என்றா இவர் சொல்லப் போகிறார்? அதே சம்பவத்தின் போது அங்கு வந்திருந்த பௌத்த பிக்குகள் பற்றி இவர் என்ன சொல்லப் போகின்றார்? அவர்கள் இந்த சதியில் சிக்கிய அப்பாவிகளா?

ஒன்று மட்டும் புரிகிறது, மேஜர் அஜித் பிரசன்ன இவ்வளவு காலமும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தக்கென ஒரு அந்தஸ்த்தை உருவாக்க முயற்சித்தார், இப்போது வேளையில் இறங்கிவிட்டார். இப்போது தான் உண்மை முகம் வெளிப்படுகிறதா?

No comments