Breaking News

சகோதரி எம்.ஜீ. ரஹீமாவின் மதமாற்றமும், சமூகத் தளங்களில் நமது சகோதரர்களும்..

Rahima சகோதரி எம்.ஜி. ரஹீமா (முன்னால் நடிகை மோனிகா) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற செய்தி சில தினங்களுக்கு முன் வெளியாகியமை நாம் அனைவரும் அறிந்ததே.  அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் அவருக்கும் மென்மேலும் மார்க்கத்தில் விளக்கத்தையும் உளத் தூய்மையையும், தைரியத்தையும் வழங்குவானாக.

சகோதரி எம்.ஜி. ரஹீமாவின் மதமாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியான நிமிடத்திலிருந்து அது சமூக வலைத் தளங்களின் முக்கிய தலைப்புக்களில் ஒன்றாகியது என்றால் தவறில்லை என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அந்த செய்தியை பரப்புவதில் நமது சகோதர சகோதரிகள் முக்கியத்துவம் வழங்கினர். இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் மறைக்கும் தருனத்தில் இது வரவேற்கத் தக்கதே.

என்றாலும், இன்றைய தினமாகும் போது Facebook தளத்திற்கு சென்று பார்த்தால் M.G. Rahima எனும் பெயரில் ஏராளமான கணக்குகளும், Fan Page குவிந்துள்ளன, சில பக்கங்கள் எம்.ஜி. ரஹிமா உத்தியோகபூர்வ பக்கம் (M.G. Rshims Official Page) என்று கூட  பக்கத்திற்கு பெயரிட்டுள்ளது. இந்த பக்கங்களில் சென்று சற்றுப் பார்த்தல் புரியும் ஒரு முக்கிய விடயம் தான், இவற்றில் சகோதரி சகோதரி எம்.ஜி. ரஹீமாவின் புகைப்படங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. போதாமைக்கு அவர் திரைப்படங்களில் நடிக்கும் போது எடுக்கப்பட்ட பழைய படங்களையும் சேர்த்து பதிந்துள்ளனர்.

எமது சகோதரிகளின் புகைப்படங்கள் சமூகத் தளங்களில் பரவுவதை விரும்பாத நாம் ஏம் இந்த சகோதரியின் படங்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும். சகோதரி எம்.ஜி. ரஹீமா அவர்கள் இப்போது ஒரு முஸ்லீம், அவரும் நமக்கு ஒரு மார்க்க சகோதரியே, எமது தங்கை அல்லது அக்காவாக இருந்தால் எந்த அளவு அவர்களை பாதுகாக்க நாம் முன்வருவோமோ அதே போல தான் இப்போது சகோதரி ரஹீமாவும் நமக்கு.

அதே போல இன்னொரு விடயத்தையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், சகோதரி ரஹீமா தான் திரையுலகிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முதலாவது நபர், மிக அன்மையில் கூட திரயுலகம் சார்ந்த இரு முக்கிய புள்ளிகள் இஸ்லாத்தி இனைந்தனர். அதுமட்டுமல்லாமல் உலகலாவிய ரீதியில் ஏராலமான் புகழ் பெற்ற முன்னோடிகல் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

இவை அனைத்தையும் விட சகோதரி ரஹீமா தான் இஸ்லாத்தை ஏற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கூறியவற்றுள் முக்கியமாக சொன்ன ஒரு விடயம் தான் “புர்கா”. தான் புர்காவை பாதுகாப்பிற்கா அனிந்தகாகவும், அதனால் தான் உள ரீதியாக அடைந்த திருப்திகாரமாகவே இஸ்லாத்தை பற்றி தேடியதாகவு கூறுகின்றார். அவ்வாரிருக்க அவரது போட்டோக்களை நாம் இவ்வாறு வளைத்தளங்களில் பரவ விடுவதும், அவரது பெயரைப் பயன்படுத்தி போலி Fan Page களை உருவாக்குவதும் அவரை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கும் செலாகவே அமையும்.

கண்டதுக்கெல்லாம் Fan Page துவங்கும் சகோதர சகோதரிகளே, தயவசெய்து ஒரு பக்கத்தை மாத்திரம் யோசிக்காமல், ஒரு செயலைச் செய்யும் முன் பல கோனங்களில் சிந்தியுங்கள். சமூக வலைத்தளங்கள் நமக்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய ஆயுதம். அதனை முறையாக கையாள முயற்சிப்போம்.

அல்லாஹ் போதுமானவன்..

No comments