Breaking News

அங்கோலா(angola) நாட்டில் இஸ்லாத்திற்கு தடை . பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டன.

Angolaஇஸ்லாத்தை தடை செய்த முதல் நாடாக அங்கோலா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதன் முதற் கட்டமாக இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார்.

அந்த நாட்டு குடிமக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் இஸ்லாத்தை மட்டும் பின்பற்ற கூடாது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை தடை செய்த முதல் நாடாக அங்கோலா இடம் பெறுகிறது.

இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர் ரோசா குருஸ் கூறும் போது:

“இஸ்லாமிய மார்க்கத்தை சட்டபூர்வமாக அங்கிகரிக்க தங்கள் நாட்டு நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் மறுத்துவிட்டது. இந்த செயல்கள் அங்கோலா அரசின் புதிய சட்டத்தின் படி நடைபெறுகிறது. அங்கோலா நாட்டு மொத்த மக்கள் தொகை 18.1 மில்லியன்.

அதில் 47% தங்கள் நாட்டில் காலம் காலமாக பின்பற்றிய மதத்தையும், 38% ரோமன் கத்தோலிக்ஷம், 15% கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள்.

80 ஆயிரத்திலிருந்து 90ஆயிரம் மக்கள் வரை இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். இவர்கள் மேற்கு ஆப்ரிக்கா மற்றும் லெபனான் நாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.

தங்கள் மதங்களை சட்டபூர்வமாக அறிவிக்க சொல்லி, 1000 மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அடுத்த அரசு ஆணை வரும் வரை அனைத்து பள்ளிவாசல்களும்மூடியே இருக்கும்.” இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸே ஈடுர்டோ, இந்நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகளின் படி தற்போது அரச அங்கீகாரத்துடன் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுவருவதாக அறியக்கிடைக்கிறது. அந் நாட்டு முஸ்லீம்களுக்ககவும் தூய இஸ்லாத்திற்காகவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

Angola Bans Islam Destroys MosquesAngola MosqueAngola

No comments