ஜனாதிபதி வாக்குறுதியை மீறியுள்ளார் – பிரபா கணேசன் அதிருப்தி
13 ஆவது திருத்த சட்டத்திற்’கு அப்பால் சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்த ஜனாதிபதி இன்று தனது வாக்குறுதியை மீறியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் குற்றம் சுமத்தியுள்ளார்.
13 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இணங்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் இனவாத கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து 13 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளமையானது நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியா இடம்பெற்று வருகின்றது என்பதில் சந்தேகத்தை தோற்று வித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக தாம் அரசாங்கத்தில் அங்கத்தும் வகிக்கின்ற போதிலும், தமிழ் மக்களிடமிருந்து எதனையும் பறித்துக்கொள்ள இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன், 13வது திருத்த சட்டத்திலுள்ள மாகாணங்கள் ஒன்றிணையும் அதிகாரத்தை மட்டும் நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
No comments