கள்ளநோட்டுகளுடன் இரண்டு பௌத்த பிக்குகள் கைது
இரண்டாயிரம் ரூபா கள்ளநோட்டுகளுடன் இரண்டு பௌத்த பிக்குகள் மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள 27 கடைகளில் அவர்கள் இரண்டாயிரம் ரூபா கள்ளநோட்டுகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள். பின்னர் அவர்கள் வலஸ்முல்லைப் பிரதேசத்தில் தங்கள் கைவரிசையைக் காட்ட முயன்றபோதே பொலிசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களிடமிருந்த 54 ஆயிரம் ரூபா பெறுமதியான கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பிக்குகள் இருவரும் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திகொண்டே கள்ள நோட்டு மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
No comments