ஹகீம் தமிழ் டயஸ்போராவின் கையாள் : விமல் வீரவன்ச
தமிழ் தேசியக் கூட்டமைப்பு , டயஸ்போர மற்றும் நோர்வே போன்ற மேலைத்தேய நாடுகளின் அடிவருடியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயல்படுகின்றார் என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
13ஆவது திருத்தம் தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் தலைவராக இருந்த காலத்தில் ஒருபோதும் வடக்கு, கிழக்கின் இணைப்பை விரும்பவில்லை.அத்துடன் ராஜிவ் ஜே.ஆர் ஒப்பந்தம் செய்யும்போது முஸ்லீம்களை கணக்கில் எடுக்காமல் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டதை அமைச்சர் அஸ்ரப் அன்று எதிர்த்தார்.
அதற்காகவே முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அவர் ஒரு போதும் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பவில்லை.அவர் கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் தொடர்பே அவர் தீர்வாக விரும்பினார். சிறிது காலம் சென்ற பின் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு நுஆ என்ற கட்சியை ஆரம்பித்தார்.
அவர் ஒருபோதும் 13வது சர்த்தையும் எதிர்த்த ஒரு அரசியல்வாதியாகவே அவர் செயல்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். வட கிழக்கு இணைந்திருந்தால் தான் அவர் முஸ்லீம் தனியான அலகு கேட்டதாகவும் அமைச்சர் விமல் நேற்று கோட்டே ரெயில்வே நிலையத்திற்கு முன்பாக உரையாற்றினார்.
ரீ.என்.ஏ மற்றும் டயஸ்போர மற்றும் நேர்வே போன்ற மேலைத்தேய நாடுகளின் அடிவருடியாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் செயல்படுகின்றார். கிழக்கு வடக்கு வாழ் முஸ்லீம்களை பிழையானதொரு முறைக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இன்றைய தேசிய சுதந்திர முன்னணி இன்று நடைபெற்ற ஊடகவியாளர் மாநட்டின்போது முகம்மட் முசம்மில் தெரிவிக்கையில், அமைச்சர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.
அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.
ஏறாவுர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலை செய்யும் போது இந்த ஹக்கீம் எங்கு போனார். கிழக்கில் முஸ்லீம்களது காணி சொத்துக்களை சூறையாடும்போது எங்கு போனார?
ஹக்கீம் ரீ.என்.ஏ ஏஜென்டாக செயல்படுகின்றார். அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார் எனவும் முசம்மில் கூறினார்.
(VD)
No comments