தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றக்கூடாது : மாநகரசபை உறுப்பினர்கள்
தம்புள்ளை பள்ளிவாசல் நீண்ட கால வரலாறு கொண்டது. எனவே அப்பள்ளிவாசலை அவ்விடத்திருந்து அகற்றக்கூடாதென தம்புள்ளை மாநகரசபை உறுப்பினர்களான நாலக்க எரந்த ஹெட்டி ஆராச்சி (ஐ.தே.க),ரூபசிங்க (பொ.ஐ.மு) ஆகியோர் தெரிவித்தனர்.
தம்புள்ளை புனித நகர அபிவிருத்தித் திட்டப்பணிகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்படவுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கங்கள் ஒன்றினணந்து தம்புள்ளையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை இன்று நடத்தின.
இச்சந்திப்பில் தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசலை பாதுகாக்ககும் சங்கமும் கலந்துகொண்டது. இச்சங்கத்தின் சார்பில் எஸ்.வை.எம்.அஜ்வாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மற்றும் தம்புள்ளை மாநகரசபை உறுப்பினர்களான நாலக்க எரந்த ஹெட்டி ஆராச்சி (ஐ.தே.க),ரூபசிங்க (பொ,ஐ.மு) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்கள் இருவரும், இப்பள்ளிவாசல் நீண்ட கால வரலாறு கொண்டதெனவும் பள்ளிவாசலை அவ்விடத்திருந்து அகற்றக்கூடாதெனவும் இதன்போது தெரிவித்தனர்.
No comments