ஹோமாகம மாவட்ட நீதிபதி பிணையில் விடுதலை
ஹோமாகம மாவட்ட நீதிமன்றின் முன்னாள் நீதிபதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவரிடம் மூன்று லட்ச ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்து, ஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 3ம் திகதி கைது செய்யப்பட்ட நீதிபதிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நீதவானை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
தலா 50 லட்ச ரூபாவிலான இரண்டு சரீரப் பிணையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சியாளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தால் பிணை ரத்து செய்யப்படும் என நீதவான் பிலபிட்டிய தெரிவித்துள்ளர்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம் சந்தேக நபர் பொலிஸ் கான்டஸ்டபிளை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments