Breaking News

அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களின் முக்கிய குறியாக தற்பொது எட்வார்ன் ஸ்னோடன்

news_12-06-2013_25edwardsnowdenஅமெரிக்காவின் அரச புலனாய்வுத் துறையான NSA மற்றும் அதன் உப நிறுவனங்கள் இணைந்து அமெரிக்க மக்களின் தொலைபேசி அழைப்புக்கள், மற்றும் அவர்களது சுயவிபரங்களை நீண்டகாலமாக வேவுபார்த்து வந்திருப்பது அண்மையில் அம்பலமானது. PRISM என்ற தொழிநுட்பத்தின் மூலம் இந்த வேவு பார்க்கும் விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னால் CIA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோடன் தற்போது அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் முக்கிய குறியாக மாறியுள்ளார். இதனால் தற்போது ஹொங்கொங்கில் தஞ்சமைடைந்திருக்கும் இவர் தனது பாதுகாப்புக்காக ஐஸ்லாந்தில் புகலிடம் கோரவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவரிடம் நீங்கள் ஏன் அமெரிக்காவின் இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கையினை அம்பலப் படுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பப் பட்ட போது, இவர் அமெரிக்க அரச உளவு நிறுவனமான NSA இனால் எதை வேண்டுமானாலும் குறிப்பாக எந்த ஒரு நபரினதும் தொலைபேசி இலக்கங்கள், அழைப்புக்கள், மின்னஞ்சல்கள்,கடவுச் சொற்கள்,கடன் அட்டைகள் என அனைத்தையும் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது போன்ற அத்துமீறலை நிகழ்த்தும் சமூகத்தில் நான் வாழ விரும்பவில்லை என்றார்.

போஸ்டன் நகரில் நிகழ்ந்தது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க இவ்வாறு வேவு பார்ப்பது அவசியம் தானே என்று கேட்கப் பட்ட போது, தீவிர வாதம் புதிதாக முளைத்த ஒன்றல்ல. அது எப்போதும் இருக்கின்றது. போஸ்டனில் நடந்தது போன்ற குற்றங்களைத் தடுக்க வேவு பார்ப்பதை விட பாதுகாப்பைப் பலப் படுத்துவது தான் தேவை என்றார். எட்வர்ட் ஸ்னோடனுக்கு அடுத்ததாக நீங்கள் செய்தது குற்றம் என உணர்கிறீர்களா? உங்களுக்கு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு 'அரசு என் மீது சுமத்தும் குற்றம் போலியானது. அமெரிக்க அரச அமைப்புக்கள் பொதுமக்களின் உரிமைகளை குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கின்றன. எனது இந்த செயற்பாட்டினால் நிச்சயம் நல்லது எதுவும் எனக்கு நடக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக உணர்கின்றேன்!' என்றார்.

மேலும் ஹொங்கொங்கில் தான் தஞ்சம் புகுந்தமைக்குக் காரணம் அது சுதந்திரத்துக்குப் பெயர் பெற்றதும் வலிமையான பேச்சுரிமை உடையதுமான நாடு என்பதால் ஆகும் என்றார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேவு பார்ப்பது குறித்துக் கேள்வி எழுப்பப் பட்ட போது NSA தொடர்ந்து பொய்யான தகவல்களைத் தருவதாகவும் ரஷ்யாவை விட அதிகமாக அமெரிக்கா தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்பதாகவும் எந்தெந்த இடங்களில் இருந்து மக்கள் அதிகம் கண்காணிக்கப் படுகின்றார்கள் என்பதைக் குறிக்கும் வரைபடங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூட அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இவரிடம் சீனாவால் நடத்தப்படும் சைபர் அட்டாக் குறித்து ஒபாமா அரசு தெரிவிக்கும் கண்டனம் பற்றிக் கேட்கப் பட்ட போது, 'நாம் தான் எல்லோரையும் எல்லா இடத்திலும் தாக்குகின்றோம். ஏறக்குறைய எல்லா நாடுகளின் உள் விவகாரங்களிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறோம்' என்றார்.

இறுதியாக இவர் தான் சிறையில் அடைக்கப் படும் அபாயம் இருப்பதாக ஒத்துக் கொண்டதுடன் தனது இந்தச் செயற்பாடு தன் குடும்பத்தினருக்குத் தெரியாது எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள் :

அமெரி்க்காவின் ரகசிய செயல்பாடுகள்: காட்டிக்கொடுத்த மாஜி சி.ஐ.ஏ. அதிகாரி!

No comments