விரிவுரையாளரைக் கத்தியால் குத்திய மாணவன் கைது !
திறந்த பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரை கத்தியால் குத்திய மாணவன் சற்று முன் கைது செய்யப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. ஊடகநிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மாணவரே குறித்த விரிவுரையாரைத் தாக்கியுள்ளார். சட்டத்துறையில் இறுதியாண்டில் கல்வி பயின்றுவரும் குறித்த மாணவன், நிர்வாகத்துடன் முரண்பட்ட காரணத்தினாலேயே இத்தாக்குதலை நடாத்தியிருக்கலாமென நம்பப்படுகிறது.
குறித்த மாணவனின் இறுதியாண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிபதற்கு ஒருநாள் பிந்தியதினால் நிர்வாகம் அதனை ஏற்கமருத்தினால் ஏற்கனவே நிர்வாகத்துடன் முரண்பட்டுள்ளார். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல் நடைபெற்றிருக்கலாமென தெரியவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்றவருகின்றன. கத்திக்குத்துக்கு இலக்கான விரிவுரையாளர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள் :
No comments