Breaking News

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பதற்றம்

1016205342Untitled-1

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர் ஒருவர் விரிவுரையாளரை தாக்கியதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அம் மாணவன் கூரிய ஆயுதம் ஒன்றினால் விரிவுரையாளரை தாக்கியுள்ளார்.காயமடைந்த விரிவுரையாளர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரிவுரையாளரை தாக்கிய மாணவன் தற்போதும் பல்கலைக்கழகத்தில் கூரிய ஆயுதத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரையில் எந்தவொரு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

No comments