13ஆவது திருத்தத்துக்கு தீர்வுகண்ட பின்னரே வடக்கில் தேர்தல்: டக்ளஸ்
தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 13ஆம் திருத்தச் சட்டம் காரணமாக, வட மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கும் சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடைபெறலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் அமைக்கப்படும். 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானதும், எதிரானதுமான கருத்துக்கள் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன்மூலம் தீர்வு காணப்படுமென டக்ளஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments