Breaking News

13 இல் கை வைத்தால் நீதிமன்றம் செல்வேன் : அசாத் சாலி

asad-sali13 ஆம் அரசிலமைப்பு சீர்திருத்தை இல்லாதொழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் செயளாலர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதியால் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியலமைப்பிற்கு 13 ஐ விட அதிகமான அதிகாரங்களை வழங்குவதாக தற்போதைய ஜனாதிபதி இதற்கு முன்னர் குறிப்பிட்டர் என நினைவு கூறிய அசாத் சாலி 25 வருடங்களாக 8 மாகான சபைகளில் அமுலில் இருந்த 13 ஆவது சீர்திருத்தம் வட மாகானத்திற்கு மட்டும் ஏன் பொருந்தாமல் போகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும் 13 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மீள் திருத்தம் செய்வதற்கு அல்லது இல்லாதொழிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகுக்கும் சுமார் 20 அமைச்சர்கள் தற்போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை சந்தோஷமளிக்கிறது என அவர் மேலும் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. யின் முன்னால் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இனைந்து தேர்தல்களில் போட்டியிடும் போது தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகளாகத் தென்படுகிறது என அசாத் சாலி அவர்கள் மேலும் குறிபிட்டார்கள்.

No comments