அசாத் சாலியை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் (Photos)
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று சற்று முன்னர் ஆரம்பமானது. தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்து ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாண சபையின் ஐ.தே.க.உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், விக்ரமபாகு கருணாரத்ன, கொழும்பு மா நகர சபை மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில், சுமந்திரன் எம்.பி. உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய், பாதுகாப்பு செயலாளரே உரிய விளக்கத்தினை தா உள்ளிட்ட அரசுக்கு எதிரான பல சுலோகங்களும் கோஷங்களும் ஆரப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
(h)
ReplyDeleteGood Job,,
முஸ்லிம் சமூகத்திற்காக தியாகங்களை செய்ய தயாராக இருக்கும் வஹ்ஹாபிய இயக்கங்களை இனம் கண்டு கொள்ள இந்த சந்தர்பத்தை அல்லாஹ் எமக்கு தந்துள்ளான்
ReplyDelete