பொது பல சேனா இனவாதத்தை தூண்டவில்லை, சாலியே இனவாதத்தை தூண்டினார் : ஹுலுகொல்ல
பொது பல சேனா அமைப்பு நாட்டில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகொல்ல தெரிவித்துள்ளார்.
அசாத் சாலியின் கைது தொடர்பில் கொள்ளுபிட்டியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மத்தியநிலையத்தில் நேற்று நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி இனவாதத்தை தூண்டி செயற்பட்டுள்ளதாகவும் அதனால் அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டியுள்ள ஹுலுகொல்ல பொது பல சேனாவோ வேறு அமைப்புக்களோ அவ்வாறான எந்த இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் அவர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு கிடைப்பின் அது தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments