அசாத் சாலியின் மனைவி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியின் மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது கணவனை நீதிமன்றுக்கு கொண்டுவருமாறும், தடுப்புக்காவலிலிருந்து அவரை விடுவிக்குமாறு கோரியே இந்த ஆட்கொணர்வு மனு நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரரான எப்.றிஸோனா ஏ.சாலி சட்டத்தரணி கௌரி சங்கர் தவராஜாவூடாக தாக்கல் செய்ய மனுவில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் லஸந்த ரத்னாயக்க மற்றும் சட்டமா அதிபர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவரை குடும்ப அங்கத்தினர்கள் பார்ப்பதற்கோ அல்லது 07 வருடங்களாக சிகிச்சைபெற்றுவரும் நீரிழிவு நோயாளியான அவருக்கு மருந்துகொடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது கணவனை தடுத்து வைத்திருப்பது நீதியற்றது எனவும் சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
No comments