குற்றம், குறைகளற்ற நாடொன்று உலகில் இல்லை: ஜனாதிபதி
இந்த உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் குற்றங்கள், குறைகள் இருக்கின்றன. சிறைச்சாலைகள் அற்ற பொலிஸ் நிலையங்கள் அற்ற, நீதிமன்றங்கள் அற்ற நாடென்று ஒன்றும் இல்லை. சோம்பேறியான அதிகாரிகள் அற்ற நாடு இல்லை. இருப்பினும் அபிவிருத்தி அடைந்த பலம்வாய்ந்த நாடுகள் இவற்றை முக்கியப்படுத்துவதில்லை' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பலாங்கொடை தர்மாஷோக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 'உலகிலுள்ள ஏனைய நாடுகள் தங்களுடைய நாட்டின் பெருமையை மாத்திரண்மு பேசுகின்றன. ஆனால், எமது நாட்டின் ஒரு சிலர், நாட்டின் நல்ல விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களையே வெளிக்கொண்டு செல்கின்றனர்' என்றும் சுட்டிக்காட்டினார்.
No comments