Breaking News

அஸாத் சாலியை விடுதலை செய்யவும்; ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்

d3787968271aadf66b69e2f7e02571e2_XL பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அசாத் சாலியின் கைது தொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அசாத் சாலி நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் தயவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments