Breaking News

அஸாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஜம்மியத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம் (தமிழில்)

Web மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
இலங்கை சோசலிஸ ஜனநாயகக் குடியரசின்
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு, நகர அபிவிருத்திகள் அமைச்சர்,
ஜனாதிபதி அலுவலகம்,
கொழும்பு 01.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு,

திரு. ஆஸாத் ஸாலி அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தியப் பத்திரிகையொன்றுக்கு அவரால் வழங்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். எனினும், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையொன்றில் திரு. ஆஸாத் ஸாலி அவர்கள் இது தொடர்பில் விளக்கமளித்திருந்ததாகவும் எமக்கு அறியக் கிடைத்தது.

மேலும், திரு. ஆஸாத் ஸாலி அவர்கள் இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது அவரது உடல் நிலையை மேலும் பாதிப்பதாகவே அமையும்.

இதனடிப்படையில், திரு. ஆஸாத் ஸாலி அவர்கள் கைது செய்யபப்பட்டமைக்கான காரணங்களை மீள் பரிசீலனை செய்யுமாறும், அவரது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறும் நாம் தங்களிடம் வேண்டுகின்றோம்.

எமது வேண்டுகோளை தாங்கள் பெருமனதுடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நாம் முழுமையாக நம்புகின்றோம்.

தங்களது நம்பிக்கைக்குரிய,

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக், தேசிய பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷெய்க் (முப்தி) எம்.ஐ.எம். ரிஸ்வி, தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments