Breaking News

அசாத் சாலி இன்னும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்

azath-salleyDSC06162குற்றப் புலனாய்வுப் பிரிவின்  தடுப்புக் காவலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸாத் சாலி  தொடர்ந்தும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அவரது உடல்நிலைய மிகவும் மோசமடைந்து வருகிறது.

உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால்  நேற்று மாலை மீண்டும் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும்  கடந்த வௌ்ளிக்கிழமையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரகசிய பொலிஸ் தலைமையகத்துக்கு மீளஅழைத்துச் செல்லப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அஸாசத் சாலி உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ளாமல் மறுத்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து அஸாத் சாலிக்கு இன்சுலின் மருந்து ஏற்றப்பட்டதாக அஸாத் சாலியின் மகள் ஆமினா நவமணிக்கு தெரிவித்தார்.

தனது கைது நியாயமற்றது எனக்கோரியே அஸாத் சாலி உணவு தவிர்ப்பு போராட்டாத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகிறார். இதேவேளை, அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோர் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அஸாத் சாலி நன்றாக உணவு உண்டு தேகாரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஹுலுகல்லவின் கூற்றை அஸாத் சாலியின் குடும்பம் முற்றாக மறுத்துள்ளது. இதுவெறும் பொய் என்றும் அஸாத் சாலி நடக்கமுடியாமல் இருப்பதாகவும், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனது தந்தையை விடுதலை செய்யக்கோரி அஸாத் சாலியின் மகள் ஆமினா ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலி மீது 18 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவைகளை விசாரித்த பின்னர் விடுதலை செய்துவிடுவதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments