பிக்குவின் திக்குளிப்பை படம்பிடித்த ரூபவாகினி படப்பிடிப்பாளர் கைது.
பெளத்த பிக்கு தற்கொலை செய்து கொண்டதனை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளரை இலங்கை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். தலதா மாளிகைக்கு அருகாமையில் மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக பெளத்த பிக்கு ஒருவர் கடந்த வெசாக் பெளர்ணமியன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பெளத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதை ஏற்கனவே அறிந்திருந்த ஊடகவியலாளர் தீக்குளித்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த பெளத்த பிக்கு உடலுக்கு பெற்றோல் ஊற்றும் போது அதனைத் தடுக்காது, தொடர்ந்தும் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்தமை, தற்கொலைக்கு ஊக்கமளித்ததாகவே கருதப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக இந்த பெளத்த பிக்கு, ஊடகவியலாளருக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே சம்பவம் நடைபெற்ற போது ஊடகவியலாளர் அதனை ஒளிப்பதிவு செய்துள்ளார். பெளத்த பிக்குவுடனான உரையாடலின் மூலமும் தற்கொலைக்கு உதவி செய்தமை புலனாகின்றது என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் அரச தொலைக்காட்சியான ரூபவாகினி தொலைக்காட்சியின் கண்டி பிராந்திய செய்தியாளரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதே விதமான செயலையே சுவர்னவாகினி தொலக்காட்சி படப்பிடிப்பாளரும் செய்துள்ளார். எனினும் அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இதுவரை அறியக் கிடைக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள் : பிக்குவின் தீக்குளிப்பு தொடர்பாக ஊடகங்கள் மீது விசாரனை
No comments