கூகுள் பலஸ்தீனுக்கு புதிய அங்கீகாரம்
சர்வதேசத்தின் பிரபல தேடல் இணையத்தளமான கூகுள், பலஸ்தீனத்துக்கு புதிய அங்கீகாரம் ஒன்றை வழங்கியுள்ளது.
இதுவரை காலமும் கூகுள் இணையத்தளத்தில் பலஸ்தீன் பிராந்தியம் என குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதம் தற்போது பலஸ்தீன் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் கூகுள் தேடல் இயந்திரத்தில் பலஸ்தீன் என்றே பதிவுகள் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச அரசியல் அரங்கத்தில் தாக்கம் செலுத்தும் ஒரு விவகாரமாக இது அமைந்துள்ளது என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தரமற்ற பார்வையாளர் அந்தஸ்து என்ற நாடு பலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், கூகுளின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில், கூகுள் பலஸ்தீனத்துக்கு மீண்டும் ஒரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
No comments