அசாத் சாலி தொடர்பில் ரணில் நாடாளுமன்றில் கேள்வி
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசாத் சாலிக்கு எதிராக சாதாரண சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காது ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஏன் அமுல்படுத்த வேண்டும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது.
அசாத் சாலி பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவே அசாத் சாலி குரல் கொடுத்தார்.
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு பயங்கரவாத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
No comments