மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள் எமது அமைப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் :BBS
மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும் விரைவில் அங்கு தமது அமைப்பின் மாநாடு நடத்தப்படுமெனநாவும் பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், மன்னார் பேராயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Comment
No comments