நுவரெலியா வரவேண்டாம் “SMS” அனுப்பியது ஒரு பாடசாலை மாணவராம்.
முஸ்லிம்கள் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என கடந்த காலத்தில் பரவிய SMS கொழும்புப் பிரதேச சர்வதேச பாடசாலை மாணவர் ஒருவராலே அனுப்பப் பட்டுள்ளது என பொலிசார் கூறுகின்றனர். பொலிஸ் ஊடகப் பிரிவு அதன் ஊடக றிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்படுவதாவது, நுவரெலியா பல்லிவாசல் நிருவாகம் இவ்வாறான ஒரு அறிவித்தலை விடுக்கவில்ல என்றுன், நுவரெலியாவில் மூவின மக்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று கூறினர். அத்தோடு SMS செய்தி தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களூடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளூடாக இந்த SMS செய்தி அநுப்பிய நபர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் கல்வி கற்கும் 15 வயது நிறம்பிய ஒரு மானவர் என அறிய வந்தது. அவர் இந்த SMS செய்தியின் உள்ளடக்கம் தொடர்பாக சிந்திக்காமல் தனது உறவினர் ஒருவருக்கு அதை அனுப்பியுள்ளார். குறித்த உறவினர் அதனை இன்னும் சிலருக்கு அனுப்பியுள்ளார் என அறியக் கிடைத்தது.
எது எவ்வாறாயினும் இந்த SMS செய்தியில் எந்தவித உன்மையும் இல்லை, இப்போது நுவரெலியாவில் மூவின மக்கலும் எந்த பேதங்கலும் இன்றி வசந்த கால கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். என குறித்த ஊடக அறிக்கை கூறுகிறது.
No comments