Breaking News

ஜனநாயக நாடுகளின் வரிசையில் 89வது இடத்தில் இலங்கை! சர்வாதிகார நாடுகள் பட்டியலில் அடக்கம்

Flag Of Sri Lanka தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவினரால் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளை பட்டியலிட்டுள்ளதில் 2012ம் ஆண்டு இலங்கை 89வது இடத்திலுள்ளது.

2011ம் ஆண்டு அறிக்கையில் பிரகாரம் இலங்கை 57வது இடத்தில் இருந்ததுடன் கடந்த வருடத்தில் இலங்கை ஜனநாயகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு ஜனநாயகம் பழுதடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் இலங்கை இருந்தது.

எனினும் தற்போது சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளப்படும் பிரதான அறிக்கை என்பது குறிப்பிடதக்கது.

No comments