Breaking News

பொதுநலவாய நாடுகளில் சிறிலங்காவை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்!

Commonwealth-of-Nations-Flagபொதுநலவாய நாடுகளில் இருந்து சிறிலங்காவை நீக்குமாறு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் சிறிலங்கா அரசு செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை நடாத்துவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் சிறிலங்கா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் அமர்வினை நடத்துவது அந்த அமைப்பின் நன்மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொள்கை மீறல்களில் ஈடுபடும் உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தாமை, அமைப்பை பலவீனப்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது.

No comments