நபியே என்னை மன்னித்துவிடுங்கள்…! இஸ்லாத்தை ஏற்ற Arnoud Van Doorn (படங்கள் இனைப்பு)
ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த தீவிர வலது சாரி அரசியல் வாதியும் முன்னனி இஸ்லாம் எதிர்பாலரும் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட “பித்னா” (Fithna) எனும் திரைப்படத்தை உருவாக்கியவர்களுல் ஒருவருமான ஆர்னொட் வான் டூர்ன் (Arnoud Van Doorn) புனித இஸ்லாத்தை எற்றுள்ளார். அல்ஹம்துலில்லஹ். அவர் முன் தினம் மஸ்ஜிது நபவிக்கு விஜயம் செய்திருந்தார். இஸ்லாத்தையும் முஹம்மத் (ஸ்ல) அவர்களையும் பற்றிய ஆழ்ந்த கற்றலின் பின் அவர் கடந்த மாதம் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
நபிகளாரின் பள்ளிவாசலின் இரண்டு இமாம்களையும் சந்தித்த பின்னர் அவர் உம்ரா கடமையையும் நிறைவேற்றியுள்ளர். இமாம்களான ஷெய்க் அல் ஹுதைஃபி மற்றும் ஷெய்க் அல் பதார் ஆகியோரை சந்தித்த வேலை இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய நடைமுறைகள் பற்றியும் அவர்கள் ஆர்னொட் வான் டூர்ன் (Arnoud Van Doorn) க்கு அறிவுறைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
நபி (ஸ்ல) அவர்களின் கப்ரினை கானச் சென்ற வேளை அவர் “நபியே என்னை மண்ணித்து விடுங்கள்…! என கதரி அழுதுள்ளார்…
ஒல்லாந்தின் பாரளுமன்ற உருப்பினருன், ஹேக் நகர சபையின் அங்கத்தவருமான ஆர்னொட் வான் டூர்ன் (Arnoud Van Doorn) அவரின் மதமாற்றம் பற்றி தனது உத்தியோகபூர்வ Twitter profile இல் அறிவித்திருந்தார். அத்தோடு “அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை, முகம்மத நபியவர்கள் இறைவனின் தீதருமாவார்” என அரபியில் ஷஹாதாவையும் அதில் பதிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த சவூதி விஜயத்தின் போது பல்வேறு மார்க்க அறிஞர்களையும் அவர் சந்தித்துள்ளர். “நான் நினைக்கின்றேன் நான் இப்போது சரியான பாதையை அடைந்துள்ளேன், இது எனக்கு ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும், நான் இன்னும் நிரைய கற்க வேண்டியுள்ளது” என அவர் சவூதி கெஸட் பத்திரிகைக்கு கூறியிருந்தார்.
No comments